Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
Best S. Ramasamy
பொள்ளாச்சி தொகுதி

பெயர் : பெஸ்ட் S. ராமசாமி
பிறந்த தேதி : 08.03.1946
கல்வித்தகுதி் : பி.ஏ.,
தொழில் : தலைவர், பெஸ்ட் கார்ப்ரேசன் (லிட்), திருப்பூர்.

திரு. பெஸ்ட் ராமசாமி அவர்கள் படிப்பில் அதிக நாட்டம் கொண்டவர். தாம் இளமையில் கல்வி கற்க முடியவில்லை என்றாலும் தனது 60 வயதில் பொருளாதாரத்தில் பி.ஏ பட்டம் பெற்றது அவருடைய சிறப்பாகும். ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல பல புத்தகங்களை அடிக்கடி வாங்கி படிக்கும் பழக்கம் உள்ளவர்.

இவர் ஒரு பன்மொழி வல்லுநர். இந்தியில் மிகச்சரளமாகப் பேசுவார். ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நன்கு உரையாடக்கூடியவர். இவர் தன்னுடைய நிறுவனங்களில் 5000 தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி வருகிறார்.

இவர் சிறந்த சமூக சேவகர். ஏழை எளியவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளார். கொங்கு நாட்டு மக்கள் மீது அன்பும் ஆதரவும் கொண்டுள்ளார். 1976ல் சிதறுண்டு கிடந்த கொங்கு வேளாளர் சமுதாயத்தை ஒன்று சேர்த்து கொங்கு வேளாளர் சங்கம் ஆரம்பித்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. அதன்பின் 1978 லிருந்து 1986 வரை கொங்குவேளாளர் அறக்கட்டளைகளின் செயலாளராக பணியாற்றினார். அந்த அறக்கட்டளையின் மூலம் "கொங்கு கலையரங்கம்" கட்டவும். "கொங்கு உயர்நிலைப்பள்ளி" ஏற்படவும் இவர் எடுத்துக் கொண்ட முயற்சியை கொங்கு இனம் நன்கு அறியும்.

இதற்கிடையில் 1988ம் ஆண்டு கொங்கு சமுதாயத்தின் பெரியோர்களை ஒன்று சேர்த்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை உதயமானது. அமரர் கோவை செழியன் தலைவராகவும், இவர் பேரவையின் முதலாவது பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று, கொங்கு நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை செய்தார். 1988-ல் பேரவையின் துணைத்தலைவராக பொறுப்பேற்றார். 2000-ம் ஆண்டு கோவை செழியன் அவர்கள் மறைவிற்க்குப் பின் கௌரவத் தலைவராக பொறுப்பேற்றார். 2007ம் ஆண்டு முதல் நமது பேரவையின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று இன்று வரை அல்லும், பகலும் அயராது உழைத்துக் கொண்டு வருகிறார். கடந்த பிப்ரவரி 15 அன்று தொடங்கப்பட்ட கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளராக களம் காண்கிறார்.

பின்புறம்
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com