Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
R. Devarajan
R. தேவராசன்
கௌரவத் தலைவர்

1982ம் ஆண்டு அகில இந்திய கட்டுனர் சங்க திருச்சி மையத்தின் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு செயலாளராகவும் துணைத் தலைவராகவும் செயல்பட்டு, 1988-89ம் ஆண்டு அகில இந்திய கட்டுனர் சங்க திருச்சி மையத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டர்.

மேலும் திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும், திருவெறும்பூர் வட்டார மண்பாடி லாரி உரிமையாளர் சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தில் உறுப்பினராகவும், கீழ்சாத்தம்பூர் செல்லாண்டியம்மன் கோயில் விளையன் கூட்ட நற்பணி மன்றத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

தீவிர ஈடுபாட்டினால் நான்கு கோயில்கள் கட்ட பேருதவியாக இருந்துள்ளார். மேலும் இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் 1984-ம் ஆண்டு முதல் டேக்-வண்-டோ (தற்காப்புக் கலை) அமைப்பின் அகில இந்தியத் தலைவராக இருந்து வருகிறார்.

தலைவராக தேர்வு செய்யப்பட்டு பேரவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளார். 2003 ம் ஆண்டிலிருந்து பேரவையின் கௌரவத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது சமுதாய பணியைப் பாராட்டி சென்னை கொங்கு நண்பர்கள் சங்கம் கொங்கு மாமணி விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com