Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
மாவீரன் தீரன் சின்னமலை
தீரன் சின்னமலை புகழ் ஓங்குக
கொங்குத்தாய் ஈன்றெடுத்த
கொள்கையுள்ள மாவீரன்
கொள்கைவேந்தன் லட்சிய நாயகன்
வீராதி வீரன் தீரன் சின்னமலையன்றோ

அந்நியன் நம் மண்ணை ஆளுவதோ
அவன் அடிமைகளாய் நாம் வாழ்வதோ (என)
அந்நியன் ஆட்சியை வெறுத்தான் வீரன்
வெள்ளையன் தலையை அறுத்தான் தீரன்
காட்டிக் கொடுத்தவன் தலை எடுத்தான்
தீயகயவர்களைத் தீரன் களை எடுத்தான்

ஓடாநிலையில் கோட்டை கட்டினான்
கொங்கு மண்ணில் கொடியை நாட்டினான்
அஞ்சா நெஞ்சுடன் ஆட்சி புரிந்தான்
ஆங்கிலப் படையை   ஆட்டிப் படைத்தான்

காட்டிக் கொடுத்தான் சமையல்காரன்
கைது செய்திட்டான் வெள்ளைக்காரன்
சூதால் வெள்ளையன் பிடித்துவிட்டான்
தூக்குக் கயிற்றால் மடிந்திட துணிந்து விட்டான்

நேர்மை என்றும் மிஞ்சாத் தீரன்
எதிரியைக் கண்டு அஞ்சாத் தீரன்
வாழ்ந்திட யாரையும் கெஞ்சாத் தீரன்
உயிர் போவதை அறிந்தும் அஞ்சாத் தீரன்
மக்களின் வாழ்வுக்கு உழைத்தான் தீரன்
தன்மானம் பெரிதெனப் பிழைத்தான் தீரன்
மண்ணில் அவன் பெயர் மறையாது
தீரன் திருப்புகழ் என்றும் மங்காது

சாகா வரம் பெற்ற !
      சரித்திர நாயகன் !!
            தீரன் சின்னமலை புகழ் ஓங்குக !!!
 
Dheeran Chinna Malai
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com