Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
தேர்தல் அறிவிப்புகள்

கொங்குநாடு முன்னேற்றக் கழகம்

அன்பார்ந்த கொங்குநாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு , வணக்கம்.

கொங்கு நாட்டில் உள்ள மக்கள் கடினமாக உழைப்பவர்கள், திறமையுள்ளவர்கள் அமைதியை விரும்பும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருந்தாலும் கூட ஆண்ட கட்சிகளும் சரி, ஆளும் கட்சிகளும் சரி நமது பகுதிக்கு தேவையான திட்டங்களையும் சலுகைகளையும் கொண்டு வராத காரணத்தினால் கொங்கு நாட்டில் வாழும் அனைத்து தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவைகளில் சில முக்கியமானவைகளை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

 1. விவசாயம் மற்றும் தொழில்களுக்கு தடையில்லா மின்சாரம் விநியோகம்.
 2. தென்னை விவசாயிகளை காப்பாற்ற கள்ளை இறக்கி அவரவர்களே விற்க அனுமதி, தென்னை வளர்ச்சி வாரியத்தை இப்பகுதியில் அமைத்து விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு மதிப்பு கூட்டிட தொழிற்சாலைகள் அமைத்து கிராமப்புற வேலைவாய்ப்பை பெருக்குதல்.
 3. பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.25-நிர்ணயம் செய்து அதில் ரூ-10 மானியமாக கொடுக்க வேண்டும்.
 4. வேளாண்மை சார்ந்த கருவிகளுக்கும் தொழில்களுக்கும் 75 சதம் மானியம்.
 5. மலட்டு விதைகளை தடை செய்து பாரம்பரிய விதைகளையும் இயற்கை விவசாயத்தையும் ஊக்குவித்தல்.
 6. விளைபொருட்கள் விற்பனையில் நஷ்டம் ஏற்படா வண்ணம் குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்து விவசாயிகளை காப்பாற்றுதல்.
 7. கரும்பு டன்-க்கு ரூ.2500/- விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
 8. கரும்பு விளையும் பகுதிகளில் எத்தனால் தொழிற்சாலை ஆரம்பித்து கரும்பு விளைச்சலை ஊக்குவிக்க வேண்டும்.
 9. 60 வயது பூர்த்தியான குறு, சிறு விவசாயிகளுக்கு இலவச வீடும் ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.
 10. கோழிப்பண்ணைக்கு இலவச மின்சாரம் கொடுக்க வேண்டும்.
 11. காய்கறிகள் விலையில்லாத போது இருப்பு வைத்து விற்க தாலுக்கா தோறும் குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும்.
 12. அவினாசி, தாராபுரம், பவானிசாகர், ராசிபுரம், ஆத்தூர், வால்பாறை, அரூர் சட்டமன்ற தொகுதிகளை சுழற்சி முறையில் தனி/பொது இடமாக அறிவிக்க வேண்டும்.
 13. பழனி, கோவை, சத்தி, சாம்ராஜ்நகர் இரயில்பாதை திட்டம். கோவை, பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு சுற்று வட்டப்பாதை திட்டம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும்.
 14. கொங்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்கு தக்கவாறு சாலைவசதி மற்றும் கட்டமைப்பு விரிவாக்கம் செய்ய வேண்டும்.
 15. விசைத்தறி, கறிக்கோழி, ஜவுளிதொழில், முட்டை உற்பத்தி, சாயத்தொழில், ஜவ்வரிசி, குச்சிகிழங்கு, பழம் பதனிடுதல், பசுமைகுடில், இஞ்சினியரிங் தொழில்கள் நசிந்து விடாமல் காப்பாற்ற மண்டலம் தோறும் வளர்ச்சி வாரியங்கள் அமைக்க வேண்டும்.
 16. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அகற்றவும், மாசுபட்ட நிலங்களை செம்மைபடுத்தவும் போர்கால அடிப்படையில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
 17. அவினாசி, அத்திக்கடவு, பாண்டியாறு, பன்னம்புழா, ஆனைமலை நல்லாறு திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.

மேற்கூறிய திட்டங்கள் மட்டுமில்லாமல் அந்தந்த பகுதி பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உடனடி திட்டங்கள் வகுக்கப்படும் ஆண்ட அரசுகள் அனைத்தும் தொடர்ந்து கொங்கு நாட்டில் மேற்கூறிய திட்டங்களை செயல்படுத்தாமல் புறக்கணிக்கப்பட்டதை அனைவரும் அறிவீர்கள்.

கொங்கு நாட்டில் இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்த நமது கட்சி கொங்குநாடு முன்னேற்றக் கழகம் முழு முயற்சி மேற்கொள்ளும்.

கொங்குநாடு நமது நாடு, அதன் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்கு கொள்ள உங்கள் மேலான வாக்குகளை கொங்குநாடு முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆதரிக்க வேண்டுகிறோம்.

வாக்களிப்பீர் ! கொங்குநாடு முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு.

 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com