Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
விவசாயிகளுக்காக போராடிய கொ.மு.க.வினரை கைது செய்வதா?
நிபந்தனையின்றி விடுதலை செய்ய பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தல் :

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒரு  தோட்டத்தின் அருகே கடந்த வாரம் மயில்கள் இறந்து கிடந்தன. இதையடுத்து தோட்ட உரிமையாளரான கந்தசாமியை வனத்துறையினர் கைது செய்தனர். மயில்கள் இறந்து கிடந்ததற்கும் விவசாயி கந்தசாமிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பெருந்துறையில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தினர் விவசாயிகளுடன் கடந்த 18-ந் தேதி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மறியலில் இறங்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 242 பேரையும் கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இதற்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கைதான அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட  கொ.மு.கழக தலைமை நிலைய செயலாளர் சூர்யமூர்த்தி, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.சி. பால சுப்ரமணியம் உள்பட விவசாயிகள், கட்சியினர் 242 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மயில்கள் இறந்ததற்காக கைது செய்யப்பட்ட விவசாயி கந்தசாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை  விடுதலை செய்ய வலியுறுத்தி போராடிய 242 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அரசு உண்மை நிலையை புரிந்து கொண்டு எந்தவித நிபந்தனையுமின்றி கைது செய்யப்பட்டுள்ள 242 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

 
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com