Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
சொன்னாங்க
 1. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை இந்த தேர்தலில் முடிந்த அளவுக்கு தடுத்து நிறுத்தினோம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பீரவீன் குமார் பேட்டி.
 2. தேர்தலில் மக்கள் அமைதி புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர் - சென்னையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேட்டி.
 3. ராகுல்காந்தி உத்தரவு இல்லாமல் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை - சென்னை முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பேட்டி.
 4. அசாம் சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மன்மோகன்சிங் வாக்களிக்காதது அறிந்து வேதனை அடைகிறேன் - குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பேட்டி.
 5. ஊழலுக்கு எதிரான மக்கள் எழுச்சியை முடக்குவதற்கு அரசியல் சக்திகளும், சமூக விரோத சக்திகளும் முயற்சி செய்கின்றன - காந்தியவாதி அன்ன ஹ்சாரே குற்றச்சாட்டு.
 6. விளையாட்டு வீரர்களுக்கும் பாரத ரத்னாவிருது வழங்கும் வகையில் அதன் விதிமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும். - மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அஜய் மக்கான் பேட்டி.
 7. வறுமைக்கோடு மேலே வரும் வரை வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு இலவசங்களை அவர்களின் வாழ்வாதாரத்துக்காக கொடுத்து தான் ஆக வேண்டும். - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேட்டி.
 8. 5 ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அவர்கள் பணிகளை நிறைவேற்ற முடியாமல் தடுப்பது நியாயமா? - முதல் அமைச்சர் கருணாநிதி கேள்வி.
 9. தேர்தல் நேரத்தில் வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நிபந்தனை இன்றி உடனே வழங்க வேண்டும். - தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேட்டி.
 10. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 4 பேரை சித்ரவதை செய்து கொன்று, அவர்களின் உடலை கடலில் வீசீயுள்ளனர். - ம.தி.மு.க  பொதுச்செயலாளர் வை.கோ குற்றச்சாட்டு.
 11. ஒரு கப் காபி குடிப்பதாக இருந்தாலும் என்னுடைய மணிபர்சில் உள்ள காசைத்தான் செலவு செய்கிறேன். - மத்திய மந்திரி மம்தா  பானர்ஜி பேட்டி.
 12. ஓய்வுக்கு முன் நீதிபதிகள் வேறு பணிகளை ஒப்புக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.  மேலும், அரசியல்வாதிகள், வக்கீல்கள் அமைச்சர்கள் ஆகியோருடன் நீதிபதிகள் தொடர்பு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.  இவைதான் ஊழலுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கபாடியா பேச்சு.
 13. கடந்த 34 ஆண்டுகளாக மேற்கு வங்க இடது சாரி கூட்டணி அரசு எவ்வித வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை.  வேலை தேடி ஏராளமான வங்காள மக்கள் குஜராத்துக்கு வந்து பல தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர். - குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி பேச்சு.
 14. தரம். விலை, நேர்த்தி, நவீனம் போன்ற காரணங்களால் திருப்பூர்  பின்னலாடைகளை சர்வதேச வர்த்தகர்கள் விரும்புகின்றார்கள் - திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ. சக்திவேல், பின்னலாடை கண்காட்சி  தொடக்க விழாவில் பேச்சு.
 15. நாட்டில் ஊழல் உச்சக்கட்டத்தில் உள்ளன.  கறுப்புப் பணத்தை மீட்பதில் மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை. - பா.ஜ. தலைவர் நிதின் கட்சாரி பேச்சு.
 
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : Jaynand