Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
விவசாயி கைதை கண்டித்து பெருந்துறையில் கொ.மு.க. போராட்டம் ; 242 பேர் கைது :

பெருந்துறை அருகே உள்ள பட்டக்காரன் பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயம் செய்துவரும் இவரது தோட்டத்திற்கு அருகே சில மயில்கள்  கடந்த வாரம் இறந்து கிடந்தன. இது தொடர்பாக கந்தசாமியை கடந்த 14-ந் தேதி வனந்துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.  இதை கண்டித்தும், பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் மான்கள், மயில்களை பிடித்து காட்டில் விட வனத்துறையை  வலியுறுத்தியும்  கொங்குநாடு முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 18-ந் தேதி உண்ணாவிரதப்  போராட்டம் நடைபெற்றது. பெருந்துறை பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற  இந்த போராட்டத்துக்கு கொ.மு.க  தலைமை நிலைய செயலாளர் சூர்யமூர்த்தி, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.சி. பாலு ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் மாவட்டம், ஒன்றிய, கிளை கொ.மு.க நிர்வாகிகள், விவசாயிகள்  சங்கம் சார்பில் காசின  கவுண்டர், சங்க செயலாளர் சுப்பு, பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திடீர் என விவசாயிகள்  ரோட்டில் உட்கார்ந்து  மறியல் செய்தனர். அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து  போராட்டத்தில் பங்கேற்ற சூர்யமூர்த்தி, கே.கே.சி. பாலசுப்ரமணியம் உள்பட 242 பேரையை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டனர். அவர்களை விடுதலை செய்யுமாறு கொ.மு.கழக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

 
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : Jaynand