Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
கொங்கு தியாகிகளுக்கு கொ.மு.க நினைவு அஞ்சலி :

விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கக்கோரி பெருமாநல்லூரில் கடந்த 1970ஆம் ஆண்டு ஜீன் 19ஆம் தேதி போராட்டம்  நடைபெற்றது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளும்,  கொங்கு தியாகிகளுமான வாரணவாசிபாளையம் மாரப்ப கவுண்டர், ஈச்சம்பள்ளம் ஆயிக் கவுண்டர், புதுப்பாளையம் ராமசாமி கவுண்டர் ஆகியோரது நினைவாக பெருமாநல்லூரில் நினைவுத்தூண் கட்டப்பட்டது. போராட்டம் நடைபெற்ற 42-ஆம் ஆண்டை முன்னிட்டு உயிரைக்கொடுத்து இலவச மின்சாரம் பெற்றுத்தந்த கொங்கு தியாகிகளுக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் மற்றும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை சார்பில் நினைவு  அஞ்சலி கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில்  கொ.மு.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பேரவை தலைவர் தேவராஜன், கொ.மு.க பொருளாளர் பாலசுப்பிரமணியன்  ஆகியோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர். மேலும் கொ.மு.க. நிர்வாகிகள் கொங்கு ராஜாமணி, சக்தி கோச் நடராஜன், இளம்பரிதி, தங்கவேல் தாஸ், கந்தசாமி மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் ரோபோ ரவி, தம்பி வெங்கடாச்சலம், வேலுச்சாமி மற்றும் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

 
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com