Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
மக்களைப் பாதிக்கின்ற விற்பனை வரியை திரும்பப் பெற வேண்டும் :

கடந்த 10 ஆண்டுகளாகவே ஜவுளித் தொழில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பல குடும்பங்கள் வேறு தொழிலை நாடிச் சென்று விட்டனர். பல பேர் வேறு மாநிலங்களுக்குத் சென்று தொழிலை மாற்றிக் கொண்டு விட்டார்கள். தொடர் மின் வெட்டு, ஆள் பற்றாக்குறை, நூல் விலை மாற்றங்கள் ஆகியவற்றால் தடுமாறிக் கொண்டிருந்த ஜவுளித் தொழில் சாயக் கழிவு பிரச்சனையில் முழுமையாக முடங்கிப் போனது.

இந்தத் தொழில் அழிந்துவிடக்கூடாது என்பதாலும், இதை நம்பியிருக்கின்ற தொழிலாளர்கள் வேலையிழந்து அவதிப்படக்கூடாது என்பதாலும், மிகுந்த சிரமத்தில் மிகக் குறைந்த லாபத்திலும், லாபமே இல்லாமலும் ஒரு சிலர் மட்டும் தொழிலைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த சமயத்தில் ஜவுளிப் பொருட்களுக்கு விற்பனை வரியை விதித்திருப்பது இந்தத் தொழிலின் அழிவிற்கு வழி வகுக்கும்.

தமிழகத்திலேயே அதிகமான மக்கள் ஜவுளித் தொழிலை நம்பியிருப்பது கொங்கு மண்டலம் தான். கொங்கு மண்டல மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற ஜவுளித் தொழிலை பாதுகாப்பது ங்கு மண்டல அரசியல் தலைவர்களுடைய தலையாய கடமையாக இருக்க வேண்டும்.  இந்தத் தொழில் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் கொங்கு நாட்டு மக்கள் புதிய அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கொங்கு நாட்டு மக்களின் நம்பிக்கை வீண் போய்விடக்கூடாது. பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் போது புதியதாக மாநில அரசே விற்பனை வரி விதித்திருப்பது ஏமாற்றத்தை கொடுக்கிறது.

பட்ஜெட்டிற்கு முன்பு ஏன் இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. கொங்கு மண்டல அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உண்மை நிலையை அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லி உடனடித் தீர்வு காண வேண்டும். ஜவுளிக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற விற்பனை வரி, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்ற தொழிலை கருணைக் கொலை செய்வதற்குச் சம்ம.

விதிக்கப்பட்டிருக்கின்ற விற்பனை வரியை கருணை உள்ளங்கொண்டு திரும்பப் பெற வேண்டும்.

 
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com