Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
அரசு கொடுக்கும் இலவசப் பொருட்கள் தமிழக உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்பட வேண்டும் :

தமிழக அரசு தேர்தலில் அறிவித்த இலவசப் பொருட்களை, தமிழகத் தயாரிப்பாளாகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். தமிழ் மக்களுடைய வரிப்பணம் மாநிலம் தாண்டி போகக்கூடாது. இலவசங்களைப் பெறுகின்ற  பயனாளிகள் மட்டுமின்றி அவற்றை உற்பத்தி செய்கின்ற இந்த மண்ணின் நிறுவனங்களும் பயன்பெற வேண்டும். அதில் வேலை செய்கின்ற தொழிலாளர்களும் பயன்பெற வேண்டும்.

இலவச சீருடைகள் தமிழகத்திலேயே வாங்கப்படுவதால் சிறு சிறு ஜவுளி உற்பத்தியாளர்களும், அதை நம்பியிருக்கின்ற தொழிலாளர்களும் பயன்பெறகிறார்கள். சத்துணவுக்கு முட்டை தமிழகத்திலேயே கொள்முதல் செய்யப்படுவதால், கோழி பண்ணைத் தொழிலை சார்ந்து வாழ்கின்ற அனைவரும் பயன்பெறுகின்றனர். அதனால் இலவசங்களை இலவசங்களாக மட்டும்  பார்த்து பயனாளிகளை மட்டும் கருத்தில் கொள்ளக் கூடாது. அதில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களுக்கு வேலை கொடுப்பதன் மூலம் ஒருவகையில் தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக அமையும். இலவசமாக வழங்கப்பட இருக்கின்ற் லேப்டாப், கிரைண்டர், மிகிஸி, ஃபேன் ஆகியவை தமிழக உற்பத்தியாக இருக்க வேண்டும். கிரைண்டர்களை சீனாவில் வாங்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழகம் மட்டுமல்ல, இந்தியப் பொருளாதார சீர்கேட்டிற்கு துணை போகின்ற செயலாகும். பாரதம் அடிமைப்பட்டிருந்த போது வெள்ளைக்காரர்கள் அவர்கள் பொருளை இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்பனை செய்து நமது செல்வத்தை கொள்ளையடித்தார்கள். தரமற்ற பொருட்களை சீனாவில் வாங்கி, நமது வரிப்பணத்தை நாடு கடத்தக் கூடாது.

கோவையிலிருந்து தான் உலகம் முழுவதும் கிரைண்டர்கள் செல்கின்றது. தமிழகத்திற்கு தேவையான கிரைண்டர்களை  சொந்த மண்ணிலேயே வாங்க முதலமைச்சர் கட்டளையிட வேண்டும். நலிந்து போயிருக்கின்ற கிரைண்டர் தொழிலை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு கொ.மு.க. தன் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

 
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com