Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
கொங்கு வேளாளக் கவுண்டர்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் கொ.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் :

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடந்த கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-

கடந்த 2 ஆண்டு காலமாக பலமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டன. சமீபத்திலும் விலை உயர்த்தப்பட்டது. எனவே, இந்த
விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என இந்த செயற்குழு வ்லியுறுத்துகிறது.

தொடர் மின்வெட்டால் தமிழகம் தொழில்துறையில் பின்தங்கியுள்ளது. மின்வெட்டு பிரச்சினையை தமிழக அரசு சரிசெய்து தொழில் துறையை காப்பாற்ற வேண்டும்.

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள திருப்பூர் சாயக்கழிவுநீர் பிரச்சினையை தீர்த்து அத்தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டுமாய் அரசை கேட்டுக்கொள்வது.

தமிழகத்தில் அனைவருக்கும் சமமான கல்வி இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும். எனவே, சமச்சிர் கல்வியில் தரமற்ற பாடங்களை நீக்கிவிட்டு சிறப்பான கல்வி வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது, விவசாயிகள் வாழ்வில் வளம் பெற தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதி வழங்கிட அரசை கேட்டுக்கொள்வது கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமுதாயத்தின் நீண்டநாள் கோரிக்கையான மிகவும்  பிற்பட்டோர் பட்டியலில் கொங்கு வேளாளர்களை சேர்க்க தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com